ரொம்ப தொந்தரவு பண்றீங்க…வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்

சென்னை: வாக்களித்த பிறகு நடிகர் வடிவேலு கலகலப்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது திடீரென அங்கிருந்த ஒருவர் “ரொம்ப தொந்தரவு பண்றீங்க..” என்று வடிவேலுவிடம் கூறியதால் அவர் முகம் மாறியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நமது நாட்டில் மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கிறது.

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நாள் முழுக்க பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்களும் வரிசையாக நின்று வாக்களித்தனர். பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்தனர்.

வாக்களித்த வடிவேலு: அதன்படி நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று பிற்பகல் வாக்களித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு கட்டத்தில் அவர், “இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு..” என்று ஜாலியாக பாடல் எல்லாம் பாடினார்.

அப்போது செய்தியாளர் எதோ கேட்க அதற்கு வடிவேலு, “என்னப்பா நான் சிவாஜி பாடல் தானே பாடினேன்.. அதை திரித்துவிட்டு வேறு மாதிரி மாத்தி விட்டறாதீங்க” என்று அவர் ஜாலியாக அவர் பேசினார். அப்போது உங்கள் படத்தில் மாற்றம் தான் மாறாதது என்ற வசனம் வரும்.. அதுபோல மாற்றம் வருமா என செய்தியாளர்கள் கேட்க, “அதை நீங்க கண்டுபிடிங்க” என்று சொல்லி நழுவிக்கொண்டார். அங்கிருந்த பலரும் வடிவேலு உடன் போட்டோ எடுத்தனர். அப்போது வடிவேலுவும் அவர்களுக்கு ஜாலியாக போஸ் கொடுத்தார்.

திடீர் குழப்பம்: வடிவேலுவை பலரும் சூழ்ந்துக்கொண்டு போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததால் அங்கு கூட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஒரு வித குழப்பமான சூழல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஒருவர், “ஓப்பனா சொல்கிறேன்.. நீங்க ரொம்ப தொந்தரவு செய்கிறீர்கள்.. எதுவாக இருந்தாலும் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே சென்று செய்யலாமே.. உங்களால் அதிகாரிகளுக்கும் தொந்தரவு தான்.. வெளியே சென்றால் பிரச்சினை இல்லாமல் பேட்டி கொடுக்கலாமே” என்று கடுகடுத்தார்.

முகம் மாறிய வடிவேலு: திடீரென அந்த நபர் இப்படி டென்ஷனாக மாற அங்கிருந்தவர்கள் முகம் சட்டென மாறியது. சட்டென வடிவேலு முகமும் மாறிய நிலையில், அதன் பிறகு நொடிகளில் சுதாகரித்துக் கொண்டார். அந்த நபரிடம், “சரியாக சொன்னீர்கள்.. சொன்னா கேட்க மாட்டீங்களா.. அண்ண சொல்றாருல்ல.. வெளியே வாங்க பார்த்துக்கலாம்” என்று கலாய்த்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here