ஃபொமேமா நிறுவனத்திற்கு சொந்தமான யாயாசான் தெங்கு அப்துல்லா இப்னி சுல்தான் அபு பக்கார் (YTA) – விலாயா மாநில இந்து சங்கமும் இணைந்து தங்களின் வட்டாரத்தில் வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பினை வழங்கினர்.
வசதி குறைந்தவர்களுக்கும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் YTA வருடாந்தோறும் அனைத்து இனத்தவர்களின் பெருநாட்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கி வருகிறோம் என்று YTA சார்பில் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்த தெங்கு ஷாயிரா தெரிவித்தார். YTA சார்பில் சமூக கடர்பாடு என்ற அடிப்படையில் இந்த அன்பளிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
விலாயா மாநிலத் தலைவி பாலாமணி தமதுரையில் விலாயா மாநில வட்டாரத்தில் வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு 150 ரிங்கிட் மதிப்பிலான உணவுப் பொருட்களுடன், தீபாவளி அன்பளிப்பு (ரொக்கம்) இனிப்பு ஆகியவற்றை வழங்கிய YTA நிறுவனத்திற்கு மாநில இந்து சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் அழைப்பினை ஏற்று இந்த தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து YTA நிறுவனத்தை சேர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.











