கோலாலம்பூர்:
மடானி அரசாங்கத்தின் வீடமைப்பு -ஊராட்சி துறை அமைச்சகம் (KPKT) மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 11,397 பொதுக் கழிப்பறைகளை மேம்படுத்தியுள்ளதாக அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு மலேசியா ஆசியான் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்க தயாராவதற்கும், 2026 ஆம் ஆண்டு அதிக சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை தருவதற்கும் ஏதுவாக, RM800 மில்லியன் செலவில், இந்த பொதுக்கழிப்பறைகள் தரமுயர்த்தப்பட்டன என்று அவர் கூறினார்.
தற்போது KPKT ஆனது 16 BMW (சுத்தமான, கவர்ச்சிகரமான மற்றும் நறுமணம் கொண்ட) பொது கழிப்பறைகளை BMW-i டாய்லெட்டுகள் என அழைக்கப்படும் ஸ்மார்ட் டாய்லெட்டுகளாக மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது வரலாற்றிலேயே பொதுக்கழிப்பறைகளை தரமுயர்த்த அரசு எடுத்த நடவடிக்கைகளில் மிக அதிக செலவைக்கொண்டது என்று அவர் மேலும் கூறினார்.









