காஜாங்:
உலு லங்காட்டிலுள்ள மஹாத் தஹ்ஃபிஸ் இன்டெக்ராசி இல்மியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காணாமல்போனதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை 6.15 மணியளவில் காசிஃபி இசிராக் கரூடின் (16) என்ற மாணவர் காணாமல் போனது குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது என்று, காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
“குறித்த மாணவன் காணாமல் போனதை அந்த இஸ்லாமியப் பள்ளி விடுதியின் வார்டன் கவனித்தார், பின்னர் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில், அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை என்றும், காணாமல்போன வாலிபரின் கடைசியாக நேற்று மாலை 3 மணியளவில் தஹ்ஃபிஸ் பள்ளி பகுதியில் காணப்பட்டார் என்றும் அறிய முடிகிறது.
“இவர் 155 சென்டிமீட்டர் உயரமும், 49 கிலோ உடல் எடையும் கொண்டவர். காணாமல்போனபோது, இளஞ்சிவப்பு நிற ஜெர்சி மற்றும் அடர் நீலம் அல்லது கருப்பு ‘டிராக்’ பேன்ட் அணிந்திருந்தார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எனவே, குறித்த இளைஞர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 03-89114222 அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹமட் அஸ்ருல் நிஜாம் ஜைனால் அபிதீனை (016) -9985730) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.