பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபடுங்க

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபடுபவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரது வாழ்க்கையிலும் மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுத்த நேரமாக பிரம்ம முகூர்த்த நேரம் கருதப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த, உன்னதமான நேரம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மொத்தமுள்ள 64 முகூர்த்தங்களில் முதன்மையான முகூர்த்த நேரமாக சொல்லப்படுவது பிரம்ம முகூர்த்த நேரமாகும்.

இது பிரம்ம தேவருக்குரிய நேரமாகவும், அனைத்து தெய்வீக சக்திகளும் ஒன்றிணையும் நேரமாகவும் கருதப்படுகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதன் பலன் பல மடங்காக பெருகும் என சொல்லப்படுவது உண்டு. இந்த நேரத்தில் மிக எளிமையான வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் நம்முடைய வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.

வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படும், சுபிட்சம் ஏற்படும்.தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கேற்ற வேண்டும். தலைக்கு குளித்து விட்டு விளக்கேற்றுவது சிறப்பு. அப்படி தலைக்கு குளிக்க முடியாதவர்கள் உடலுக்கு மட்டும் குளித்து விட்டு, மஞ்சள் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு விளக்கேற்றலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் முகம் மட்டும் கழுவி விட்டுக் கூட விளக்கேற்றலாம். ஆனால் நடுத்தர வயதுடையவர்கள் கண்டிப்பாக குளித்து விட்டு தான் விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையில் ஏற்றும் விளக்குடன் அகல் விளக்குகள் எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம். வீட்டின் நிலை வாசலில் அதிகாலையில் விளக்கேற்றி வைப்பது சிறப்பு.

ஒரு விரிப்பு இட்டு, அதன் மீது அமர்ந்து முதலில் தட்ஷிணாமூர்த்தியை வணங்கி, அவருக்குரிய ஸ்லோகங்களை 11 முறை சொல்ல வேண்டும். விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை 3 முறை சொல்லி விளக்கேற்ற வேண்டும். இந்த மந்திரங்களை சொல்லி விட்டு, திருமணம், குழந்தை, வேலை, படிப்பு, பொருளாதார பிரச்சனை என எந்த காரியம் கை கூட வேண்டுமோ அதை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இப்படி தொடர்ந்து தினமும் விளக்கேற்றி, மந்திரங்களை சொல்லி வேண்டி வந்தால் ஒரே வாரத்திலேயே உங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்கான வழிகள் பிறக்கும். பிரம்ம காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டு வந்தாலும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை காணலாம்.

தட்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் :

சோமம் ஆனந்தம் ஸம்பூதம்
சோமார்க்க க்ருத சேகரம்
தக்ஷிணாபி முகம் வந்தே
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மாஸ்ரயே

விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

சுபம் பவது கல்யாணம்
ஆரோக்கியம் தன சம்பந்தா
சத்ருபுத்தி வினாசாய தீப ஜோதி நமோஸ்துதே

பிரம்ம காயத்ரி மந்திரம்:

ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here