கோலாலம்பூர்:
RM6.6 பில்லியன் மதிப்புள்ள நம்பிக்கை மோசடி வழக்கில் (CBT) முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் தேசிய கருவூலத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா ஆகியோரை அவ்வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை வழங்குவதாக (DNAA) கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி முஹமட் ஜமில் ஹுசின் தனது சுருக்கமான தீர்ப்பில், நஜிப் மற்றும் முகமட் இர்வானின் வழக்கறிஞர்களின் DNA A விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்ததாகக் கூறினார்.
அனைத்துலக பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை மோசடி தொடர்பாக இருவருக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு பொது நிதியை தவறாக பயன்படுத்தி IPIC நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டதாக இருவருக்கும் எதிராக ஆறு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.