கோல திரெங்கானு:
நேற்று முதல் தாக்கிய கடுமையான வெள்ளம் காரணமாக திரெங்கானுவில் உள்ள நான்கு மாவட்டங்களில் மொத்தம் 18 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
உலு திரெங்கானு, கெமாமன் (ஐந்து), டுங்கூன் (நான்கு) மற்றும் செத்தியூ (மூன்று) ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளை மூடுவதாக மாநிலக் கல்வித் துறை இயக்குநர் ஜெலானி சுலோங் கூறினார்.
உலு திரெங்கானுவில், செக்கோலா கெபாங்சான் (SK) லுபோக் பெரியோக், SK பாடாங் ஸ்டார், SK டெங்காவாங், SK பாடாங் செடெபு, SK தெங்கு அம்புவான் இண்டான் மற்றும் SK கோலா பிங் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
அதேநேரம் கெமாமனில், மூடப்பட்ட பள்ளிகள் SK பாடாங் குபு, செக்கோலா மெனெங்கா கெபாங்சான் (SMK) அயர் பூத்தே, SK பாசிர் காஜா, SK .செபெராங் தயோர் மற்றும் SK ஆர்.கே.டி.செபெராங் தயோர் என்பன உள்ளன.
“மேலும் டுங்கூனில், SK பாசிர் ராஜா, SK ஜோங்கோக் பத்து, SK மிண்டா தாலோங் மற்றும் SK கோலா ஜெங்கல் என்பனவும், அதே சமயம் செத்தியூவில், SK. சுங்கை லாஸ், SK. சுங்கை டோங் மற்றும் SK. கம்போங் புக்கிட் உலு நேரஸ் ஆகியவையும் அடங்கும்,” என்று அவர் தொடர்புகொண்டபோது கூறினார்.




















