ஈப்போ,
பேராக் மாநில வரலாற்றில் முதன் முறையாக பெருந்தொகையாக 152 கோடி (1.52 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) ஒதுக்கப்பட்டுள்ளது என்று பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட் பெருமிதம் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசிய மந்திரி பெசார் இவ்வாறு தெரிவித்தார்.
வளமான பேராக், வளமான மக்கள் என்னும் மாநிலத்தின் கருப்பொருள் தொடர்கிறது: மக்களின் நல்வாழ்வு, மனித மூலதன மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அந்த வகையில் பேராக் மாநில வரலாற்றில் பெரும் வரவு செலவுத் திட்டமாக அமைந்துள்ள இத்திட்டத்தில் மொத்த ஒதுக்கீடான 152 கோடி ரிங்கிட்டில் 98.18 கோடி ரிங்கிட் நிர்வாகத்திற்காகவும் 53.8 கோடி ரிங்கிட் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு வரி வசூலிப்பில் 12.11.2024ஆம் தேதி வரை 111 கோடி ரிங்கிட் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மக்கள் நலத்துறைக்கு முன்னுரிமை தரும் வகையில் 62.83 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது அடுத்தாண்டிற்கான பட்ஜெட்டில் ஏறத்தாழ சரிபாதி, தொகையாகும்.இதில் உணவு உதவித் திட்டம், பேராக் செஜாத்ரா கார்டு வீட்டு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டு கவனம் செலுத்தும் வகையில் 61.2 கோடி ரிங்கிட் MARRIS மூலம் சாலைப் பராமரிப்புக்காகவும் வெள்ளத் தடுப்புத் திட்டம் தஞ்சோங் மாலிம்-லுமுட் நெடுஞ்சாலையின் மேம்பாடு போன்ற பல்வேறு பெரிய திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. கல்வி மனித மூலதனத்தில் முன்னேற்றம் கல்வி உதவி, திவெட் TVET திட்டங்கள் போன்ற பல் வேறு திட்டங் களுக்கும் மாணவர் ஊக்கத்தொகை உட்பட மனித மூலதன மேம் பாட்டிற்காக மொத்தம் 9.48 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை வனப் பாதுகாப்புத் திட்டங்கள் ஜியோபார்க் (Geopark ) மேம்பாடு உள்ளிட்ட பசுமை முயற்சி களுக்கு 2.4 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு வழங்கல் பாதுகாப்பு பேராக் செஜாத்ரா 2030 நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, உணவுப் பொருட்களின் நிலைத்தன்மை கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதற்காக 1.72 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில-மத்திய ஒத்துழைப்பு திட்டங்கள்: நீர் ஆதார பாதுகாப்பு, புதிய பள்ளி திட்டங்கள் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த 17 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பேராக் மாநில சிறந்த நிதி நிர்வாக சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பிரதிபலிக்கும் வகையில், தேசிய கணக்காய்வாளர் (ஆடிட்டர் ஜெனரலின்) சான்றிதழைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்று சொன்னார்.
























