புத்ராஜாயா,
பங்களாதேஷ் அரசின் தலைமை ஆலோசகர் டாக்டர் முகமது யூனுஸ், மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தில் மலேசியாவுக்கு வருகை தந்தார். அவரை இன்று புத்ராஜாயா உள்ள பெர்டானா வளாகத்தில் பிரதமர் அன்வார் வரவேற்றார்.
யூனுஸ் மற்றும் பிரதமருடன் இரண்டு நாடுகளுக்கிடையேயான வணிகம், முதலீடு, வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது. மேலும், பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
யூனுஸ், நாளை தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) நடைபெறவுள்ள படடமளிப்பு விழாவில்கலந்து கொள்வதுடன், பொதுக் கருத்தரங்கிலும் பங்கேற்பார்.
2024-ஆம் ஆண்டில் மலேசியா-பங்களாதேஷ் இடையியேயான வணிகம் 5.1% வளர்ச்சி பெற்று RM13.35 பில்லியனாக இருந்தது. பங்களாதேஷ், தென்னாசியாவில் மலேசியாவின் இரண்டாவது பெரிய வணிகத் தகுதியுடைய நாடு ஆகும்.
இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

























