கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகாங், சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் (புத்ராஜெயா), நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய ஐந்து இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பகாங் (பெக்கான் மற்றும் ரொம்பின்) மற்றும் சிலாங்கூர் (சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங்) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


















