மோசமடையும் வெள்ளம் ; இறப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு, 140,896 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர்:

நேற்று (டிசம்பர் 1) பிற்பகல் கிளந்தான், மாச்சாங்கில் கால்நடைகளைக் கண்காணிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு முதியவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவத்துடன் நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இரவு 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140,896 ஆகக் குறைந்துள்ளது. இது மாலை 4 மணிக்கு 148,024 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேராக் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இங்கு 36 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் லாரூட், மாடாங் மற்றும் செலாமா, ஹிலிர் பேராக், கிந்தா மற்றும் கம்பார் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here