ஓர் ஆசிரியரால் அறிவை மட்டும்தான் போதிக்க முடியுமா என்ன? அழகிலும் தம்மை உயர்த்திக்காட்டிட முடியும் என சாதித்திருக்கிறார் ஆசிரியை தனுசியா.
2024ஆம் ஆண்டுக்கான மலேசிய உலக அழகி பட்டத்தை வென்ற ஆசிரியை தனுசியாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
24 வயதான அவர் மலேசிய உலக அழகி பட்டத்துடன் 50,000 ரிங்கிட்டையும் பரிசாகப் பெற்றுள்ளார்.

இவ்வாண்டுக்கான இரண்டாவது தேசிய அளவிலான மலேசிய உலக அழகி போட்டி சபா, கோத்தா கினாபாலுவிலுள்ள சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
கோலாலம்பூரைச் சேர்ந்த தனுசியா செட்டி தனது அழகு, அறிவாற்றல், பேச்சுத்திறன் ஆகியவற்றால் நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தார்.
சமூக வலைத்தளங்கள் ஆசிரியை தனுசியாவை போற்றுகின்றன. உற்சாகமான பதிவுகளை அள்ளுகிறார் அவர்.
இதனிடையே அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்துகொள்கிறார் என்பது மேலும் ஒரு சிறப்புத் தகவலாகும்.
இந்த பதிவை பார்த்துவிட்டு நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லலாமே.





















