கோலாலம்பூர்:
உணவு மற்றும் பானங்கள் என கூறப்பட்ட பொட்டலங்களில் போதைப் பொருட்களை மறைத்து நாட்டிற்குள் கடத்த இரு மலேசியர்கள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளை தேசிய சுங்கத் துறை முறியடித்தது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வருகை மண்டபத்தின் டெர்மினல் 1 இல் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தனித்தனி நடவடிக்கைகளில் இந்த செயல் முறை கண்டறியப்பட்டதாக மத்தியப்பகுதி சுங்கத்துறை துணை இயக்குநர் ஜெனரல் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்தார்.
முதல் வழக்கில், ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த 18 வயது மலேசிய ஆடவரின் உடமைகளை ஸ்கேன் செய்ததில், அதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்ததைத் தொடர்ந்து, அவர் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.