கெடாவில் வெள்ள நிலைமை சீரடைகிறது; நிவாரண மையங்களில் தங்கியுள்ளார் எண்ணிக்கை 3,676 ஆக குறைந்தது

அலோர் ஸ்டார்:

கெடாவில் வெள்ளம் சீரடைந்து வருகின்ற நிலையில், வெள்ளம் காரணமாக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 3,676 ஆக குறைந்துள்ளது.

கெடா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் காலை 8 மணி நிலவரப்படி, அங்கு மூன்று மாவட்டங்களில் உள்ள 23 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 3,676 பேர் தங்கியுள்ளனர், இது நள்ளிரவில் 3,772 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here