மத்திய அரசியலமைப்பின் பிரிவு 19 இன் கீழ் 7 ஹரிமாவ் மலாயா வீரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது – சைஃபுடின்

கோலாலம்பூர்:

ஹரிமாவ் மலாயா அணியின் ஏழு வீரர்களுக்கு மத்திய அரசியலமைப்பின் பிரிவு 19 மற்றும் பிரிவு 20(1)(e) இன் கீழ் மலேசிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பிரிவு 19, அரசாங்கம் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து, செயலாக்கி, முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது என்றும், இவ்விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

“2018 முதல், பிரிவு 19 இன் கீழ் மொத்தம் 23 கால்பந்து வீரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது .

இந்தப்பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட மொத்த குடியுரிமை விண்ணப்பங்கள் 49,000 உள்ளன. நான் பதவியேற்றதிலிருந்து, 6,000 விண்ணப்பங்கள் இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளன. அதில் 23 பேர் கால்பந்து வீரர்கள்,” என்று அவர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

அண்மையில் FIFA, சில வீரர்களின் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதை கண்டறிந்ததைத் தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து சைஃபுடின் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here