PhD பட்டம் பெற்ற காஜாங் சிறைவாசி; அரச மன்னிப்பில் விடுதலை

கோலாலம்பூர்:

சிறையில் இருந்தவாரே பிஎச்டி PhD எனும் முனைவர் பட்டம் பெற்ற காஜாங் சிறைவாசிக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தம்முடைய பிறந்த நாளை முன்னிட்டு அரச மன்னிப்பு வழங்கினார்.

மூராட் (உண்மை பெயர் அல்ல) முனைவர் பட்டம் பெற்ற முதலாவது சிறைவாசி என்று சிறை இலாகா அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தது.

2001 ஆம் ஆண்டில் இருந்து சிறையில் இருக்கும் இவர் வணிக நிர்வாகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார்.

Tahanan Limpah Sultan எனும் கருணை திட்டத்தின் கீழ் 14 வயதில் கைது செய்யப்பட்ட இந்நபர் காஜாங் சிறைச்சாலை போதைப்பித்தர் புனர் வாழ்வு மையத்தில் வைக்கப்பட்டார்.

சிறையில் தண்டனை நிறைவேற்றியவாறு தன்னுடைய கல்வியை தொடர்ந்து இப்போது வணிக நிர்வாகத் துறையில் பிஎச்டி டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறார்.

சிலாங்கூர் சுல்தானின் அரச மன்னிப்பு பெற்று அவர் விடுதலையானார். அவரின் விடுதலை உத்தரவு வாரண்டை காஜாங் சிறை இயக்குனர் பிரேஷாடின் மொன்ஷி Preshahdin Monshee வாசித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here