காசா நெருக்கடி: உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை – பிரதமர் அன்வார் இப்ராகிம்!

கோலாலம்பூர்:

பாலஸ்தீனிய காசா பகுதியில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்க, ஐக்கிய நாடுகள் சபை போன்ற தற்போதைய பல்தரப்பு அமைப்புகள் (multilateral system) தோல்வியடைந்துவிட்டன. எனவே, உலகளாவிய நிர்வாகத்தில், அவசர சீர்திருத்தங்கள் தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகஹிம் வலியுறுத்தியுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) தலைமையில், தியான்ஜினில் நடைபெற்ற, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation Plus) கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இலட்சியங்களுக்கும், நடைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளி, நம்பிக்கையை அரித்துவிட்டதாகக் கூறினார்.

அதுமட்டுமின்றி, தற்போதுள்ள அமைப்புகளின், வர்த்தகம், பருவநிலை மாற்றம், யுத்தம் போன்ற விவகாரங்களில், செயலற்ற தன்மை, நம்பிக்கையைக் குறைத்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவேதான், சீனாவின் உலகளாவிய நிர்வாக முயற்சிக்கு மலேசியா ஆதரவு அளிப்பதாகவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முன்னுரிமைகளான இணைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மாற்றம் ஆகியவை, ஆசியான் (ASEAN) அமைப்பின் இலக்குகளுடன் ஒத்துப்போவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் அன்வர் இப்ராஹிம், சீன அதிபரின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அனைத்துலக உறவுகளில், மிதவாதம், ஒத்துழைப்பு, சமநிலைக்கு, மலேசியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here