டிரம்புக்கு META நிறுவனம் $1.3மி. நிதியளிப்பு

சான் பிரான்சிஸ்கோ:

தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கான செலவீனங்களுக்கு அமெரிக்காவின் META நிறுவனம் US$1.3 மில்லியன் நிதி வழங்கியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டொனல்ட் டிரம்புடன் ஆன நேரடி உறவை மேலும் வளர்க்கும் நோக்கில், META நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸுக்கர்பெர்க், டிரம்பின் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிதிக்கு US$1 மில்லியன் நன்கொடை அளித்துள்ளதாக META நிறுவனம் டிசம்பர் 10ஆம் தேதி தெரிவித்தது.

அந்த நன்கொடை அளிக்கப்பட்டதற்கான முழு விவரங்களை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. டிரம்பும் ஸுக்கர்பெர்க்கும் சந்திப்பு நடத்தி, ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நன்கொடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஸுர்க்கர்பெர்க், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோர் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் டிரம்புக்குப் புகழாரம் சூட்டியதோடு, எதிர்க்கட்சியினரை விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here