எட்டு வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படி

கோத்தா கினபாலு:

பாவில் தனது எட்டு வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு 15 ஆண்டுச் சிறைத் தண்டனையும் பத்துப் பிரம்படிகளும் விதித்து நேற்று கோத்தா கினபாலு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளி, டிசம்பர் 3ஆம் தேதியும் அதற்கு முன்பு சில முறையும் அவரது எட்டு வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.

சாபாவின் ‘தொங்கொட்’ மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, 40 வயதான அவளது தந்தை அவளைப் பாலியல் வன்கொடுமை செய்த ரகசியத்தை பள்ளிக்கூடப் பகிர்வு நேரத்தின்போது தெரிவித்தார். அது பற்றி தகவல் தெரிந்த தாயார் டிசம்பர் 6ஆம் தேதி காவல்துறையில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 7ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அந்த ஆடவர் அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார்.

டிசம்பர் 3ஆம் தேதி ‘தொங்கொட்’ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) அவர் ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது சிகிச்சையும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here