இங்குள்ள பூலாவ் மாபுல் கடல் பகுதியில் நேற்று சீன சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
குறித்த ஆடவரை காணவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, செம்பூர்ணா கடல்சார் போலீசார் அருகிலுள்ள ரிசார்ட்டில் இருந்த டைவர்ஸ் உதவியுடன் நடத்திய தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆணின் சடலம், அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு அருகில், 17 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றுக் காலை 11.35 மணியளவில் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டதாக செம்பூர்ணா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சப்ரி ஜைனோல் தெரிவித்தார்.
இது தொடர்பில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், இந்த வழக்கை திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளனர் என்றார்.
























