குவந்தான்:
கடந்த 15 அன்று ஜாலான் குவந்தான்-பெக்கானில் உள்ள தாமான் ஸ்ரீ இந்தரபுராவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட 14 வயது சிறுமி, நேற்று பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்.
நூர் சோலிஹா சோர்பினா ஜாப்ரி என்ற அந்த சிறுமி இரவு 10.30 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்தார் என்று, குவந்தான் காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறினார்.
“சிறுமி ஏன் வெளியேறினார் என்பது குறித்து விசாரிக்க, காவல்துறை இன்று அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் என்றும், அச்சசிறுமி வீடு திரும்பிய பின் அவர்களின் குடும்பத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.