கோலாலம்பூர்:
நேற்றிரவு கெப்போங்கில் உள்ள கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட “ஒப்ஸ் கெகர்” நடவடிக்கையின்போது மொத்தம் 67 சட்டவிரோத குடியேறிகள் மற்றும் மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 57 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் அடங்குவர், அதேநேரம் அவர்களுள் 46 பேர் தாய்லாந்து நாட்டினர், 8 பேர் வங்கதேசத்தினர், 5 லாவோசியர்கள், 4 வியட்நாமியர்கள், 2 மியன்மார் நாட்டவர்கள் மற்றும் தலா ஒருவர் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று, கோலாலம்பூர் குடிநுழைவு இயக்குநர் வான் முகமட் சாப்ஃபி வான் யூசோஃப் கூறினார்.
இரவு 11.30 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையின் போது, இரண்டு உள்நாட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“தடுக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c), அதே சட்டத்தின் பிரிவு 15(1)(c) மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் விதிமுறை 39(b) ஆகியவற்றின் கீழ் குற்றங்களைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
1959/63 குடியேற்றச் சட்டம் பிரிவு 56(1)(d) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று உள்ளூர்வாசிகளும் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுவதாக வான் முகமட் சௌபீ கூறினார். குடிநுழைவு டிப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.