பல பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு செனட்டரும் தனியார் மருத்துவக் கட்டணக் கட்டமைப்பின் விரிவான ஆய்வுக்கு அழைப்பு விடுத்து, தனியார் சுகாதாரத்துறையில் உள்ள மாறுபட்ட கட்டணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று ஒரு கூட்டறிக்கையில், சிம் ட்ஸே டிசின், ஜிம்மி புவா, தௌஃபிக் ஜோஹாரி, சியூ சூன் முன் மற்றும் பாப் மனோலன் ஆகியோர் மருத்துவ மற்றும் சுகாதார காப்பீடு/தக்காஃபுல் பிரீமியங்களின் உயர்வைக் கட்டுப்படுத்தும் பேங்க் நெகாரா மலேசியாவின் நடவடிக்கையை வரவேற்றனர்.
தற்போது தனியார் மருத்துவமனை கட்டணங்கள் மீது தங்கள் கவனம் செலுத்தப்படுவதாக கூறிய அவர்கள், அதிக காப்பீட்டு கட்டணத்திற்கு மூல காரணம் அதிக தனியார் மருத்துவமனை கட்டணங்களே என்றும் கூறினார்.
பேங்க் நெகாரா மலேசியா மற்றும் சுகாதார அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விளக்கத்தில், டெங்கு நோயாளிகள் காப்பீட்டு உத்தரவாதக் கடிதங்களுடன் 4,978 ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்றும், “பணம் மற்றும் க்ளைம்” நோயாளிகள் 1,288 ரிங்கிட் மட்டுமே செலுத்தப்படுவதாக என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டு கால் முறிவு அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 200,000 ரிங்கிட்டை வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்குச் செல்பவர்கள் கால் முறிவுக்கு சிகிச்சை அளிக்க 70,000 ரிங்கிட் மட்டுமே செலுத்துகிறார்கள். ஏன் இவ்வளவு கட்டண வித்தியாசம்? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மருத்துவமனைப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை குறித்து பேங்க் நெகாரா மலேசியா கூறியதாக நாடாளுமன்ற் உறுப்பினர்கள் கூறினர். இது மருந்துக் கட்டணங்களை விட 59-70% அதிகமாக இருப்பதாகவும், அதே போல் மருத்துவமனைகளில் உள்ள சிரிஞ்ச்கள், கையுறைகள் மற்றும் காஸ் போன்ற நுகர்வுப் பொருட்களின் மீது அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாததையும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதிக தனியார் மருத்துவமனை கட்டணங்கள் பற்றிய பிரச்சனையை ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஒரு நிலையான தனியார் மருத்துவமனை சுற்றுச்சூழல் அமைப்பு, பொது மருத்துவமனைகளை நெரிசலில் இருந்து காப்பாற்றும் மற்றும் அரசாங்க நிதியை எளிதாக்கும். இது பி40 பிரிவினர் அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சையை பெற உதவும் என்றனர்.









