ருத்ராட்சம் பற்றி தெரியாத விஷயங்கள்

சிவ பெருமானின் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை போல் ருத்ராட்சமும் பலவிதமான நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. நம்பிக்கையுடன் அணிபவர்களின் உடலிலும், மனதிலும், வாழ்க்கையிலும் ருத்ராட்சம் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை உணர முடியும்.

சிவ சின்னங்களில் ஒன்றாக கருதப்படுவது ருத்ராட்சம். பல காலமாக தவத்தில் இருந்த சிவ பெருமான், மீண்டும் தன்னுடைய கண்களை திறந்த போது அவரது கண்களில் இருந்து சிந்திய கண்ணீர் துணிகள் பூமியில் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட இடங்களில் விழுந்தது. அந்த கண்ணீர் துணிகள் மரங்களாக முளைத்து, அவற்றில் இருந்து தோன்றிய காய்களில் இருந்து உருவானது தான் ருத்ராட்சம்.

இறைவனின் கண்ணீரில் இருந்து தோன்றியது என்பதால் ருத்ராட்சத்திற்கு இயற்கையாகவே தெய்வீக சக்தி அதிகம். இதில் நேர்மறை ஆற்றல்களும் அதிகமாக உள்ளது. ருத்ராட்சம் ஆன்மிக ரீதியாக எப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தது, பலன்களை தரக் கூடியது என அனைவருக்கும் தெரியும்.

ருத்ராட்சம் ஆன்மிகத்தில் உயர்நிலையை அடைவதற்கு மட்டுமல்ல அறிவியல் ரீதியாக பல நன்மைகளையும் வழங்குவதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் மனம் ஒருநிலைப்படும், மன அழுத்தம் குறையும். பதற்றம், எதிர்மறை எண்ணங்கள் குறையும்.

அது மட்டுமல்ல ருத்ராட்சத்தை தொடர்ந்து அணிந்து கொள்வதால் பல விதமான நோய்களின் கடுமையான தாக்கங்களில் இருந்து விடுபடலாம் என சொல்லப்படுகிறது. என்னென்ன நோய்களில் இருந்து விடுபட, எத்தனை முக ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* ஒருமுக ருத்ராட்சம் – ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை உள்ளடக்கியது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலை வலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும். இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்கள் ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

* 2 முக ருத்ராட்சம் – சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள், குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.

* 3 முக ருத்ராட்சம் – ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த அழுத்தம், குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சத்தில் உள்ளது.

* 4 முக ருத்ராட்சம் – கணிதம், எழுத்தும், அறிவு போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. தொழில் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here