போலித் துப்பாக்கிகளால் மலேசியாவிற்கு நெருக்கடி – காவல்துறை தலைவர்

கோலாலம்பூர்:

லேசியாவில் சில குற்றவாளிகள் மாதிரி அல்லது போலித் துப்பாக்கிளைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜெல்-பிளாஸ்டர்ஸ் (gel-blasters) என்றழைக்கப்படும் மாதிரி துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மலேசிய காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

ஜெல்-பிளாஸ்டர் துப்பாக்கிகள், விளையாட்டுத் துப்பாக்கிகளாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றன. பார்ப்பதற்கு உண்மையான துப்பாக்கிகளைப் போலவே இருக்கும் அவற்றை மின்வர்த்தகத் தளங்கள், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் வாங்க முடியும். ஒரு ஜெல்-பிளாஸ்டரின் விலை 150 ரிங்கிட்டில் தொடங்கும்.

மலேசியாவில் கடந்த 2023ஆம் ஆண்டில் அத்தகைய மாதிரி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி 148 குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை கொள்ளைச் சம்பவங்கள் என்று கூறப்படுகிறது. அத்தகைய குற்றச் செயல்கள் இவ்வாண்டும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் அத்தகைய 36 குற்றச் செயல்கள் பதிவாயின.

மலேசிய காவல்துறையினர் இப்பிரச்சினையைத் தீவிரமாகக் கையாண்டு வருகின்றனர். மாதிரி துப்பாக்கிகள் விற்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தேசிய காவல்துறை தலைவர் ரசாருடின் ஹுசைன் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று (டிசம்பர் 21) மாதிரி துப்பாக்கிகள் விற்கும் கும்பலைக் காவல்துறை முறியடித்தது. அந்நடவடிக்கையில் 600க்கும் அதிகமான மாதிரி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.“அத்தகைய சம்பவங்கள் (இவ்வாண்டு) குறைந்துள்ளதை நாங்கள் அறிவோம். அதேவேளை, இத்தகைய பொம்மை, மாதிரி ஆயுதங்கள் விற்கப்படுவது எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது,” என்று அவர் சொன்னார்.

“அந்த மாதிரி துப்பாக்கிகள் சிறாருக்கான விளையாட்டுப் பொருள்களாக விளம்பரப்படுத்தி விற்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் பல பார்ப்பதற்கு உண்மையான துப்பாக்கிகளைப் போல் இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here