கொதிக்கிறது ஹவாய்த்தீவு எரிமலை; எந்நேரமும் வெடிக்கும் அபாயம்

‘அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை கொதிக்கத் தொடங்கியுள்ளது என்றும்,
எந்நேரமும் வெடிக்கும் அபாயம் உள்ளது’ எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள இந்த தீவு, எரிமலைகளுக்கு புகழ் பெற்றது.

இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் ஆண்டு முழுவதும் இருக்கும். இங்குள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியா ஒன்றாகும்.

1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் வெடித்து சிதறியது. எரிமலைக் குழம்பில் 700 வீடுகள், சுற்றுலா மையங்கள், சாலைகள் சேதமடைந்தன. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் வெடித்து சிதறியது. அப்போதும் பெரும் சேதம் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் எரிகுழம்பு கொதிக்க துவங்கியது. எந்நேரமும் தீப்பிழம்புகளை வெளியேற்றும் அபாயம் உள்ளது. வீடுகள் உள்ளிட்டவை சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கிலாவியா எரிமலை ஆண்டு முழுவதும் கொதித்துக் கொண்டே இருக்கும் எரிமலையாகும். கடந்த 200 ஆண்டுகளாக தொடர்ந்து வெடித்து வருகிறது. ஹவாய் எரிமலை ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here