வரும் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் மழை பெய்யும் -மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

எதிர்வரும் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு சபாவின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பில், சபாவின் தம்புனன், மேற்கு கடற்கரை, தாவாவ் (லஹாட் டத்து), சண்டக்கான் (தெலுபிட், கினாபடங்கான், பெலூரான் மற்றும் சண்டக்கான்) மற்றும் கூடாட் ஆகிய பகுதிகள் அடங்கும் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இதேபோன்ற வானிலை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) தொடங்கி மூன்று நாட்களுக்கு கிளந்தானை பாதிக்கும் என்றம் கணிக்கப்பட்டுள்ளது.

இதில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங் மற்றும் பாசிர் பூத்தே ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here