இணையத்தைக் கலக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிறிஸ்துமஸ் விடுமுறையை ஃபின்லாந்தின் லாப்லாந்து எனப்படும் நகரத்தில் கழித்து வருகின்றார். ரொனால்டோ அங்கு தன குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றார். அங்கு ரொனால்டோ ஒரு சாகசத்தை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார்.

கால்பந்து ஆடுகளத்தில் பல சாகசங்களை நிகழ்த்தி வரும் ரொனால்டோவின் இந்த புதிய சாகசம் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது. தற்போது வரை ரொனால்டோவின் சாகச வீடியோ 200 மில்லயன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 20 டிகிரி செல்சியஸ் உறைபனியைத் தாங்கிக்கொண்ட ரொனால்டோ பனியால் சூழப்பட்ட ஒரு சிறிய குளத்தில் குளித்தார். இதை ரொனால்டோ அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டார்.

அந்த வீடியோ 213 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ நீச்சல் உடையில் நின்றுகொண்டு ,நண்பர்களே, இது ஒரு புதுவிதமான அனுபவம், உறைபனி, -20 என்பதை பதிவிட்டார். பின்னர் ரொனால்டோ மெதுவாக ஏணியில் இறங்கி பனிக்கட்டி நீரில் மூழ்கி அனைவரையும் திகைக்க வைத்தார். இந்த வீடியோ தான் இணையத்தை தற்போது கலக்கி வருகின்றது.

ரொனால்டோவின் இந்த சாகச வீடியோ அனைவரையும் ஈர்த்துள்ளது. ஒரு சிலரை இந்த வீடியோ அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் கால்பந்து ஆடுகளத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வரும் ரொனால்டோவின் மறுபக்கத்தை ரசிகர்களை பார்த்து ரசித்தனர். கடந்த சில நாட்களாக ரொனால்டோ குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார். அதை பார்க்கும் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். அவர் மகிழ்ச்சியாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகின்றனர்.

இந்நிலையில் ரொனால்டோவின் இந்த வீடியோவிற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் ரொனால்டோவால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என கமன்ட் செய்கின்றனர். மேலும் ஒரு சிலர் இதற்காக தான் இவரை நாங்கள் GOAT என அழைக்கின்றோம் என்கின்றனர்.

இவ்வாறு அந்த வீடியோவை பார்த்து ரொனால்டோவின் ஏராளமான ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒரு சில ரசிகர்களோ இதுபோன்ற ஆபத்தான சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என ரொனால்டோவிற்கு அறிவுரை கூறியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here