டாமான்சாரா, 86ஆவது பரதன் கிண்ண காற்பந்து போட்டியில் சிலாங்கூர் மாநிலம் வெற்றிப் பெற்றதற்காக புக்கிட் கியாராவிலுள்ள ரோயல் சிலாங்கூர் கிளப்பில், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிலாங்கூர் காற்பந்துச் சங்கத்தின் உதவித் தலைவர் (Selangor FA) டத்தோ டாக்டர் சுகுமாரன், சிலாங்கூர் இந்தியர் விளையாட்டுப் பேரவையின் உதவித் தலைவர் டத்தோ பதி, டத்தோ கெனத் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், எனது எல்லையற்ற வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அனைத்து வீரர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொண்டாட்டம், கொண்டாடுவதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், இந்த இறுதிப் போட்டியில் சிலாங்கூர் (Selangor) அணி எவ்வளவு அர்ப்பணிப்போடு விளையாடியது என்பதை நானே நேரடியாகப் பார்த்தேன். இறுதியில் பெனால்டி (penalty) வாய்ப்பு மூலம் மலாக்கா (Melaka) அணியை வீழ்த்தி நாம் வெற்றிப் பெற்றுள்ளோம். வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
டத்தோ சுகு அவர்களுக்கு எனது வாழ்த்துகள். நான் அவரோடு பழகிய முதல் நாளை இன்னும் நினைத்துப் பார்க்கிறேன். அவர் என் நண்பர், இப்போது அவர் சிலாங்கூர் காற்பந்துச் சங்கத்தின் உதவித் தலைவராக இருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள் என இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்ட முன்னால் தேசிய காற்பந்து வீரர் அஸ்லான் ஜொஹார் தெரிவித்தார். டத்தோ சுகு கூறிகையில், சிலாங்கூர் மாநிலம் 20ஆவது கிண்ணத்தை வென்றதிற்காக தாம் பெரும் மகிழ்ச்சியோடு இருப்பதாக, இன்னும் பல கோப்பை வெல்வோம் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
எஸ்.ஷாண்











