லோரி விபத்துகள்: 6 ஆண்டுகளில் 1,457 உயிரிழப்புகள்

கோலாலம்பூர்:

2019 தொடங்கி 2024 நவம்பர் மாதம் வரை கடந்த ஆறு ஆண்டுகளில் லோரி விபத்துகளில் 1,475 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துகளில் பெரும்பாலானவை நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்தவை ஆகும்.

அதே காலக் கட்டத்தில் 473 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் 1,076 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன என்று புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து புலன்விசாரணை, அமலாக்கப் பிரிவு இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹஸான் பஸ்ரி கூறினார்.

2019 இல் தான் மிக அதிகமான மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டில் 274 பேர் மரணமுற்ற நிலையில் 2020 இல் 226, 2021 இல் 230, 2022 இல் 232, 2023 இல் 235 பேர் இவ்விபத்துகளில் உயிரிழந்தனர் என்று அவர் மேலும் சொன்னார்.

இதே காலக்கட்டத்தில் பஸ் சம்பந்தப்பட் 548 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றுள் 153 மரணங்கள் நிகழ்ந்தன. 120 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. மேலும் 218 பேர் சொற்ப காயங்களுக்கு சிகிச்சைப் பெற்றனர் என்று முகமட் யுஸ்ரி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here