கோலக்கிராய்:
கோலக்கிராய் மற்றும் தானா மேரா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) இரவு முழுவதும் பெய்த கன மழையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கோலக்கிராயிலுள்ள கம்போங் பெடல், கம்போங் செனுலாங் மற்றும் கம்போங் தஞ்சோங் காலா ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோலக்கிராய் சிவில் தற்காப்பு அதிகாரி கேப்டன் அப்துல் பதாஹ் அப்துல் அஜிஸ் கூறினார்.
இன்று மதியம் 1 மணியளவில், தாழ்வான பகுதிகளில் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்ந்ததாக அவர் கூறினார்.
“வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய முக்கியமான இடங்களைக் கண்காணிக்க நாங்கள் எங்கள் பணியாளர்களை நியமித்துள்ளோம்,” என்று அவர் கூறினார், தேவைப்பட்டால் தற்காலிக நிவாரண மையங்கள் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழைக்கு பிறகு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது என்று அவர் சொன்னார்.