அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புதன்கிழமை (ஜனவரி 1) வாகனம் ஒன்று கூட்டத்தின்மீது மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேகமாகச் சென்ற லாரி ஒன்று கூட்டத்தின் மீது மோதியதைத் தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறிய ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி சிபிஎஸ் நியூஸ் தெரிவித்தது. காவல்துறையினர் அந்த நபரைத் திருப்பிச் சுட்டதாகத் தெரிகிறது
துப்பாக்கிச்சூட்டுக்குப் பயந்து அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.