உயர் கல்வி நிறுவனங்களில் தீவிரவாத சிந்தனைகள் பரவுவதை உயர் கல்வி அமைச்சு கண்காணிக்கிறது.– அமைச்சர் ஷம்ரி

கோலாலம்பூர்,

IS தீவிரவாதக் குழுவின் சிந்தனைகளை மாணவர்களில் பரப்பும் சாத்தியமான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷம்ரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 36 பங்களாதேஷ் நாட்டவர்கள் உட்பட பலர், IS அடிப்படையிலான தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் SOSMA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“இந்த சிந்தனைகள் உள்ளூரிலோ வெளிநாட்டிலோ இருந்து பரவுவதைத் தடுக்கும் வகையில், காவல்துறையுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் எப்போதும் தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது,” என அவர் செத்தியாவங்சா பிரிவு அம்னோ கூட்டத்தின்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த வழக்கில் மலேசியர்கள் எந்தவித தொடர்பும் இல்லையென உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த குழுவுடன் தொடர்புடையவர்கள் பங்களாதேஷ் பிரஜைகளாகவே உள்ளனர் எனவும், சிலர் ஏற்கனவே தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறையின் சிறப்பு பிரிவு தெரிவித்தது எனவும் அவர் கூறினார். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here