ஓட்டுநர் பற்றாக்குறை; திண்டாடும் பேருந்து மற்றும் லோரி சேவை நிறுவனங்கள்

கோலாலம்பூர் :

பேருந்து மற்றும் லோரி சேவை வழங்கும் நிறுவனங்கள் கடுமையான ஓட்டுநர் பற்றாக்குறையால் போராடி வருகின்றன.

இதனால் குறித்த நேரத்திற்கு போக்குவரத்து சேவை கிடைக்காமல் போனால் தமது நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை என்பன கேள்விக்கு உள்ளாகும் என்று, பான் மலேசியா பேருந்து நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ முகமட் அஷ்பர் அலி கூறினார்

தொழிற்சாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான சரக்கு லோரிகள், விரைவு பேருந்துகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட துறைகள் சுமார் 5,000 ஓட்டுநர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறன என்று அவர் மேலும் சொன்னார்.

நீண்ட தூர பயணங்கள் வழங்கும் பேருந்து, லோரி நிறுவனங்கள் இரண்டாவது ஒட்டுநரை நியமிக்க முடியாது போராடி வருகின்றன என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here