நஜிப் ஆதரவு பேரணி: அம்னோ, பாஸ் தலைவர்கள் மோதல்

அரண்மனை உத்தரவுக்கு பின்னர் நாளை ஜனவரி 6 ஆம் தேதி புத்ராஜெயா பேலஸ் ஆஃப் ஜஸ்டிஸ் முன்பாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த நஜிப் ஆதரவு பேரணியை அம்னோ ரத்து செய்துவிட்டது. மற்ற கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் புவாட் ஸர்காசி அறிவுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் விவகாரத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அம்னோ தான். இருப்பினும் ஆதரவு பேரணி விவகாரத்தில் கட்சி தலைமைத்துவத்தின் முடிவை மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சில தரப்பினர் அரசியல் ஆதாயங்களுக்காக இவ்விவகாரத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்று அவர் சாடினார்.

நஜிப் ஆதரவு பேரணி திட்டமிட்டபடி ஜனவரி 6 ஆம் தேதி நடந்தே தீரும் என்று பாஸ் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் அறிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here