தாய்லாந்தின் பட்டானி காவல் நிலையம் அருகே குண்டுவெடிப்பு; மலேசியர் உட்பட அறுவர் காயம்

தென் தாய்லாந்தின் பட்டானி மாகாணத்திலுள்ள மியாங் பட்டானி மாவட்டக் காவல் நிலையம் அருகே இன்று திங்கட்கிழமை காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில், ஒரு மலேசியர் உட்பட ஆறு தன்னார்வ பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

M'sian among those injured in bomb blast near Pattani police station

இந்தச் சம்பவம் காலை 8 மணி அளவில், காவல் நிலையத்தில் நடந்த காவல்துறை அணிவகுப்பிறகு நிகழ்ந்ததாக மியாங் பட்டானி காவல்துறை தலைவர் கோலனல் ஜெப்ரி சுலைமான் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தக் குண்டு வெடிப்பில் காயமடைந்த 20 வயது மலேசியர் தன் மனைவியை எதிர்பார்த்து காரில் காத்திருந்தபோது, குண்டு வெடிப்பினால் சிதறிய கண்ணாடி துண்டுகள் மூலம் அவர் காயமடைந்தார் என ஜெப்ரி மேலும் கூறினார்.

Malaysian among those injured in bomb explosion near Thai police station

அதேநேரம் அவரது மனைவி பயண ஆவணங்கள் குறித்து காவல்நிலையத்தில் அளித்துக் கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது என்றும் அவர் சொன்னார்.

சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் பட்டானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here