டணிஸ்தா சுரேஸ்
கோலாலம்பூர்,
ஐந்து நாட்களுக்கு முன்பு ஷாப்பிங் மால் கழிப்பறையில் சிசுவை வீசிவிட்டு சென்றதாக ஜப்பான் பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இங்கு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அப்பெண் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
36 வயதான நோடா ஜுன்கோ என்ற அந்த ஜப்பானிய பெண், ஜனவரி 12 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 5.15 மணி வரை Cheras பகுதியில் உள்ள ஒரு வணிக மையத்தின் கழிப்பறையில் குழந்தையின் உடலை அப்புறப்படுத்தியதன் மூலம் குழந்தை பிறப்பை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 318 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிருபிக்கப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.


வழக்கை மார்ச் 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.நாடாளுமன்றக் குற்றவியல் வழக்கறிஞர் நர்ஸ்யுஹதா ஹுஸ்னா சுலைமான், இரண்டு உத்தரவாதங்களுடன் 10,000 ரிங்கிட் ஜாமீனை முன்மொழிந்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முஹம்மது அபிஃப் சே ஹாட், இது நோடவின் முதல் குற்றம் என்பதால், குறைந்த ஜாமீனைக் கோரி விண்ணப்பித்தார்.
“எனது வாடிக்கையாளர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார், மேலும் அவருக்கு முந்தைய குற்றவியல் பதிவு எதுவும் இல்லை” என்று வழக்கறிஞர் கூறினார்.
மஜிஸ்திரேட் நீதிபதி நூரெலின்னா ஹனிம் அப்துல் ஹலிம், குற்றம் சாட்டப்பட்ட அப்பெண் இரண்டு உத்திரவாதங்களுடன் 6,000 ரிங்ட் ஜாமின் வழங்கினார். கூடுதலாக, வழக்கு முடிவுக்கு வரும் வரை குற்றச்சாட்டுக்குட்பட்ட பெண்ணின் சர்வதேச பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
நீதிமன்றம் மறுபரிசீலனைக்கு வழக்கை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.