சீனப்புத்தாண்டை முன்னிட்டு சுமார் 2 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்பனை – KTMB நிறுவனம்

சிரம்பான்:

சீனப் புத்தாண்டுடன் இணைந்து மொத்தம் 270,000 ரயில் டிக்கெட்டுகளில் இதுவரை 210,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக KTMB நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்தப் பண்டிகை விடுமுறையுடன் கூடுதலாக கோலாலம்பூர்-பட்டர்வொர்த், பினாங்கு லோகோமோட்டிவ் ரயில் சேவைக்காக ஒரு நாளைக்கு இரண்டு பயணங்களாக KTMB அதிகரித்துள்ளது என்று, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் கூறினார்.

சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான டிக்கெட்டுகள் யாவும் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக கோலாலம்பூர்- ஈப்போ, கோலாலம்பூர்- பட்டர்வெர்த் ஆகிய நகரங்களுக்கு இடையிலான டிக்கெட் விற்பனைகள் முடிந்து விட்டன என்றும், மேலும், MRO திட்டத்தின் மூலமாக மலேசிய போக்குவரத்து அமைச்சு புதிதாக மின்சார இலகு ரக ரயில் ஒன்றைப் பெற்றுள்ளதாக இந்த மின்சார இலகு ரக ரயில் சீன புத்தாண்டை முன்னிட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், இன்றைய நிகழ்ச்சிக்காக, MRO திட்டத்தின் மூலம் முடிக்கப்பட்ட ETS ரயிலை போக்குவரத்து அமைச்சகம் பெற்றதாகவும், இதனால் சீனப் புத்தாண்டு காலத்திலும் அதற்குப் பின்னரும் சேவையில் இருக்கும் கூடுதல் ரயில்களில் ஒன்றாக அது மாறியதாகவும் லோக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here