தைப்பூசம் 21 நாள் விரத முறை

முருக பக்தர்கள், தைப்பூசத்திற்கு 48 நாள், முருகனுக்காக மாலை போட்டு விரதம் மேற்கொள்வார்கள். 48 நாட்கள் எங்களால் விரதம் இருக்க முடியாது என்பவர்கள், 21 நாட்கள் முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கக்கூடிய வழக்கமும் இருக்கிறது. எங்களால் மாலை போட்டு விரதமே இருக்க முடியாது என்றாலும், நீங்கள் தைப்பூசத்திற்கு முருகனுக்காக விரதம் இருக்கலாம்.
மாலை மட்டும் தான் போடப்போவது கிடையாது. மற்றபடி இறைவனின் பாடல்களை பாடி, அந்த முருகனின் நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே, தைப்பூச விரதத்தை மேற்கொண்டாலும், உங்களுக்கான அருள் நிச்சயம் கிடைக்கும். நீங்கள் வேண்டிய வேண்டுதல் 21 நாட்களுக்குள் நிறைவேறும்.
தைப்பூசத்திற்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை தைப்பூசத்திற்கு 21 நாள் விரதம் இருக்க வேண்டும் என்றால், 21-1-2025 முதல் 11-02-2025 ஆம் தேதி வரை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தைப்பூச திருநாளானது வரவு இருக்கிறது. நீங்கள் மாலை போடாமல் விரதம் இருப்பவர்கள் ஆக இருந்தால், உங்களது அன்றாட வேலைகளை நீங்கள் செய்து கொள்ளலாம்.
செருப்பு போடலாம். முடி வெட்டலாம், நகம் வெட்டலாம், இறப்பு வீட்டிற்கு செல்லலாம், பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் வந்தால் இடையே எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மாலை போட்டு விரதம் இருந்தால், சபரிமலைக்கு எப்படி சில விஷயங்களை கடைப்பிடிப்போம், அதேபோலத்தான் முருகனுக்கும் மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் கடைப்பிடித்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் மாலை போடாமல் விரதம் இருப்பதாக இருந்தால் காலை 6:00 மணிக்கு முன்பாகவே முருகப்பெருமான் திருவுருவப்படத்திற்கு விளக்கு ஏற்றி  முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு பாடலை படிக்க வேண்டும். பாடலை முழுசாக படிக்க முடியவில்லை என்றாலும், ஏதாவது நான்கு வரி பாடலை படிக்க வேண்டும்.
திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல், இதிலிருந்து ஏதாவது ஒரு நான்கு வரிகளை படித்தாலும் போதும் ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோலத்தான் மாலை நேரத்திலும், மாலை 6 மணிக்கு மேலாக பூஜை அறையில் முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகனுக்கு உகந்த ஒரு பாடலை படியுங்கள். எதுவுமே சொல்ல முடியவில்லை என்றால் தினமும் 27 முறை “ஓம் சரவணபவ” மந்திரத்தை சொல்லி முருகனை நினைத்து விரதம் இருக்கலாம். அசைவம் சாப்பிடக்கூடாது.
அடுத்தவர்கள் மனது நோகும்படி பேசக்கூடாது. யாருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாது. கோபப்படக்கூடாது, அமைதியாக வேலை செய்யக்கூடிய நேரம் போக மீதம் நேரம் எல்லாம் முருகனின் நினைவோடு  இந்த நாட்களை கழிக்க வேண்டும். வரக்கூடிய 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையிலருந்து இந்த விரதத்தை துவங்கி பாருங்கள். இந்த 21 நாட்களும் கட்டாயம் அசைவம் சாப்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வளவுதான், இந்த சுலபமான விஷயங்களை பின்பற்றி, விரதம் இருந்தால், நீங்கள் வைத்த வேண்டுதல் நிச்சயம் தைப்பூசத்தன்று நிறைவேறிவிடும். தைப்பூசம் அன்று நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்றாலும், பரவாயில்லை. அடுத்த 60 நாட்களுக்குள் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம், நிறைவேற வாய்ப்புகள் இருக்கிறது. நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
எண்ணங்களுக்கு எப்போதுமே ஒரு சக்தி இருக்கிறது. முருகனை நம்பி விரதம் இருக்கின்றோம். மனதில் நாம் வைத்த வேண்டுதல் நடக்குமா? நடக்காதா என்று அலைமோதல் இருக்கவே கூடாது. ஆத்மார்த்தமாக சந்தேகமில்லாமல் நாம் வைத்த வேண்டுதல் நிச்சயம் நடக்கும் என்று நம்பி, முருகனுக்கு இந்த விரதத்தை இருக்க துவங்குங்கள். விரதத்தில் தடையும் வராது, வேண்டுதலில் குறையும் வராது, எந்த சந்தேகங்களும் விரதத்தில் வந்து தொல்லை கொடுக்காது. முருகனை நினைத்து நீங்கள் வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here