காஜாங்:
காஜாங்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து விழுந்த உயிரிழந்த 19 வயது இளைஞனின் காரை சோதனையிட்டத்தில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) மதியம் 12.34 மணிக்கு பாதிக்கப்பட்டவர் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்ததாக காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1971 துப்பாக்கிச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவரின் மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.