நாட்டின் மூன்று மாநிலங்களில் அதிகாலை 1 மணி வரை இடியுடன் கூடிய மழை – மெட்மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர்:

திரெங்கானு, பகாங் மற்றும் சரவாக் மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணி வரை இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில், திரெங்கானு மாநிலத்தில் கெமாமன், பகாங் மாநிலத்தில் ஜெராண்துட், மாரான், குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களில் இந்த வானிலை நிலவும்.

மேலும் சரவாக்கில் செரியான், சமரஹான் (சிமுன்ஜன்), மூக்கா, பிந்துலு, மிரி (சுபிஸ், பெலுரு, மிரி மற்றும் மருடி) மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்ததுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here