சீனப்புத்தாண்டை முன்னிட்டு 2.4 மில்லியன் வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையும் என எதிர்பார்ப்பு

ஜார்ஜ் டவுன்:

ந்த ஆண்டு சீனப் புத்தாண்டு விடுமுறை நாட்களில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பினாங்கு மாநிலத்திற்குள் நுழையும் என்று பினாங்கு காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

வரும் ஜனவரி 29 ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கி வருவதால், சராசரியாக தினமும் சுமார் 2 இலட்சம் வாகனங்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அமாட் கூறினார்.

“எனவே அடுத்த வாரம் தொடங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதேநேரம் பினாங்கில் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் எட்டு பகுதிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“blackspots” எனக்கூறப்படும் விபத்து நிகழும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்தை நிர்வகிக்க 24 மணி நேரமும் போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று ஹம்சா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here