கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று மலேசியா வந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு ஜோகூர் அரச குடும்பத்தின் மிகப்பெரிய கௌரவமான (D.K.1) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோவுக்கு D.K.1 விருது வழங்கும் நிகழ்வு இன்று அரண்மனையில் நடைபெற்றது, இதில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்துகொண்டார் என்று, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டரின் முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியுள்ளார்.





















