சனி பகவானால் வரும் பாதிப்பிலிருந்து விலக பதிகம்

ஜாதக கட்டத்தில் சனிபகவான் சரியில்லை. ஏழரை சனி நடக்கிறது. பாத சனி நடக்கிறது. ஜென்ம சனி நடக்கிறது. இப்படி சனி பகவானால் வாழ்க்கையில் பெரிய அளவில் பிரச்சனைகள் துன்பங்கள் வரும். பெரிய அளவில் நஷ்டங்கள் ஏற்படும். அனுபவரீதியாக இந்த காலகட்டத்தில் நிறைய வாழ்க்கை பாடங்களை நாம் கற்றுக் கொள்வோம். இந்த சூழ்நிலையில் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், இறைவனின் ஆசிர்வாதம் நமக்குத் தேவை.

கிரகங்களின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. குறிப்பாக சனி பகவானை திருப்தி அடைய செய்ய வேண்டும். சனி பகவானின் மனம் குளிர்ந்தால் மட்டும் தான், சனி பகவானின் பாதிப்புகள் குறைக்கப்படும். சனிக்கிழமை என்ன வழிபாடுகளை மேற்கொண்டால் சனிபகவானின் ஆசியை பெறலாம். சனிபகவான் கோபம் தனிய எந்த பாடலை பாட வேண்டும் ?
சனி தோஷம் விலக பரிகாரம் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சனிக்கிழமை காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட வேண்டும். இது முதல் பரிகாரம். பிறகு பக்கத்தில் சிவன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு செல்லுங்கள். சிவன் கோவிலில் நவகிரக சன்னிதானம் இருக்கும். சனி பகவானுக்கு இரண்டு விளக்குகள் ஏற்றி வைத்து, அவருக்கு புஷ்பங்கள் வாங்கி கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

இந்த சனிபகவானை, அதாவது நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும். ஒன்பது முறை வலம் வரும்போது நீங்கள் அவரிடம் எந்த வேண்டுதலையும் வைக்க வேண்டாம்.  சனீஸ்வராய போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் கோளறு பதிகம் படிக்கலாம்.
கோளறு பதிகத்தில் பத்து பாடல்கள் உள்ளன. கோவிலை வலம் வந்து கொண்டே பத்து பாடலையும் படிக்க முடியும் என்றால் படிக்கலாம். முடியாதவர்கள் இந்த பாடலை மட்டும் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களை விளக்கும். நவகிரக சன்னிதானத்தை சுற்றும் போது படிக்க வேண்டிய கோளறு பதிகம் பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.
கோளறு பதிகம்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே
னுளமே புகுந்தவதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்
வியாழன் வெள்ளி சனி

பாம்பிரண்டு முடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை
நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

ஒன்பது முறை நவகிரக சன்னிதானத்தை வலம் வரும்போது இந்த பாடலை உங்களால் எத்தனை முறை படிக்க முடியுமோ அதனை முறை படித்துவிட்டு, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளவும். எப்போதுமே நவகிரகத்தில் சனி பகவானுக்கு நேர் எதிராக நின்று இறைவழிபாடு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும். பக்கவாட்டில் நின்று சனி பகவானை வழிபாடு செய்து விட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.

சனிபகவான் வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு பிறகு அந்த கோவிலில் இருக்கும் ஈசனை தரிசனம் செய்துவிட்டு கோவில் பிரகாரத்தை வளம் வந்து, பிறகு வீடு திரும்பும் போது, ஏதாவது ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். உங்களால் முடிந்த தான தர்ம காரியங்களை செய்யலாம்.
சனிக்கிழமை அன்று நீங்கள் செய்யும் தர்மம் உங்கள் வாழ்வில் அதி அற்புதமான பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
மாந்தி, சனி பகவான் என்ற பெயரை கேட்டாலே அந்த இடத்தில் “சிவசிவசிவ” என்று மூன்று முறை சொல்லி விடுங்கள் தோஷங்களும் உங்களை விட்டு விலகும். சனிக்கிழமையில்  சொன்ன இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு சனி பகவானால் பெரிய அளவில் பாதிப்புகள் வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here