தைப்பூசம்: பினாங்கிற்கு 1.5 மில்லியன் பக்தர்கள், பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

ஜார்ஜ் டவுன்:

ந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பினாங்குக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை நடாத்தும் அனைத்து தரப்பினரும், குறிப்பாக சம்பந்தப்பட்ட கோவில்கள் மற்றும் குழுக்கள், இவ்விழா சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, பினாங்கு இந்து அற வாரியத்தின் (LWHPP) தலைவர் RSN ராயர் கூறினார்.

கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டியது. இந்தப் தைப்பூசத்தில் மலேசியா முழுவதிலும் இருந்து மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள் என்று அவர் சொன்னார்.

மேலும் தைப்பூசமும் பள்ளி விடுமுறையும் ஒன்றாக வருவதால், இந்த ஆண்டு இன்னும் பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கிறோம். ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, மேலும் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக சம்பந்தப்பட்ட கோயில்களின் கடின உழைப்புக்கு எனது உயர்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here