புக்கிட் மெர்தாஜாம் Alma தொழிற்சாலை பகுதியில் தீப்பரவல்; மறுசுழற்சி ஆலை எரிந்து நாசம்

புக்கிட் மெர்தாஜாம்:

ல்மா லைட் தொழில்துறை (Alma Light Industrial Area )பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மறுசுழற்சி ஆலை எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்ட போது அந்த இடத்தில் தொழிலாளர்கள் யாரும் இருக்கவில்லை என்றும், இதனால் எந்த உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி மாஸ் ரஃபியுதீன் மாஸ் அரிஃபின் கூறினார்.

சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 9.37 மணிக்கு தகவல் கிடைத்தது என்றும், தீயணைப்பு குழுவினர் குறித்த இடத்திற்கு வந்தவுடன், 2,787 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட குறித்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது, தீயினால் குறித்த மறுசுழற்சி ஆலை 60 விழுக்காடு அழிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் கடுமையான பணிக்கு பின், இன்று காலை 6 மணியளவில் தீ முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

“தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகளின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும், மேலதிக விசாரணைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தீயணைப்புப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here