மினுக்கி மினுக்கி பாடலுக்கு அரை மணி நேரத்தில் டியூன் போட்டேன் : ஜி.வி. பிரகாஷ்

வெயில் படத்தில் தனது இசை பயணத்தை தொடங்கி தற்போது நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்துவிட்ட ஜி.வி.பிரகாஷ், 25 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டில் கேப்டன் மில்லர், தங்கலான், அமரன் உள்பட பல மெகா படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தார். இதில் தங்கலான், அமரன் படங்களின் இசை பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில். ஜி .வி .பிரகாஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் முழு ஈடுபட்டுடன் நான் இசையமைக்கிறேன். என்றாலும் அதிக டைம் எடுத்து உருவாக்கிய சில பாடல்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாது. ஆனால் சில பாடல்கள் குறைவான நேரத்தில் உருவாக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆகிய உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தங்கலான் படத்தில் இடம்பெற்ற மினுக்கி மினுக்கி என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்தார்கள். ஆனால் இந்த பாடலை அரை மணி நேரத்தில் நான் உருவாக்கி விட்டேன் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here