மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் விரார் கிழக்கில் உள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு புதன்கிழமை (ஆகஸ்ட் 27) திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் பலியானதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கிய நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களில் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேசமயம், 25க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மும்பை மக்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, நகரம் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையால் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















