காணாமல் போன பெட்டாலிங் ஜெயாவை சேர்ந்த 34 வயது பெண் இறந்து கிடக்க கண்டெடுப்பு

கோலாலம்பூர்:

டந்த புதன்கிழமை காணாமல் போனதாக கூறப்பட்ட பெட்டாலிங் ஜெயாவை சேர்ந்த 34 வயது பெண் யோங் ஜியா யெய்ன் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

இன்று அதிகாலை கடற்கரையில் யோங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. பெலாங்கி உத்தமா காண்டோமினியத்தில் உள்ள தனது வீட்டை விட்டு நீல நிற புரோத்தோன் ஈஸ்வராவில் யோங் கடைசியாக வெளியேறியதாகவும், அவர் காணாமல்போனதாக ஜனவரி 31 அன்று காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெண் ஒருவரின் சடலம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதை கோலா சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் ராம்லி காசா உறுதிப்படுத்தினார், மேலும் அது தொடர்பான அறிக்கையை காவல்துறை விரைவில் வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here