அரசு திட்டங்களில் லஞ்சம் தொடர்பாக 6 பேரை கைது செய்தது சரவாக் எம்ஏசிசி

லஞ்சம் வாங்கியச் சந்தேகத்தின் பேரில் சரவாக்கில் ஒரு சிவில் இன்ஜினியர், மேலும் மூன்று நிறுவன உரிமையாளர்கள் உட்பட ஆறு நபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது. அவர்கள் 40 முதல் 70 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் ஆவர்.

முதற்கட்ட விசாரணையில், 2006 முதல் இவர்கள் லஞ்சம் பெற்று வருவதாகவும், குத்தகையாளர்களின் அரசாங்க திட்டங்கள் மதிப்பில் 10 விழுக்காடு வரை கமிஷன் பெற்று வந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து குத்தகை திட்டங்களைப் பெற்று தருவதற்கு சிவில் இன்ஜினியர் லஞ்சம் பெற்றதாகவும் நம்பப்படுகிறது.

இதில் MACC ஒரு புரோட்டான் X70 வாகனத்தையும், 450,000 ரிங்கிட் ரொக்கத்தையும், நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் 2009 எம்ஏசிசி சட்டம் பிரிவு 17(ஏ) கீழ் விசாரிக்கப்படுவதாக எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அமாட் குசைரி யாஹ்யா கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று மிரி, சிபு, கூச்சிங்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் காவல் உத்தரவு பெறப்படும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here